கடலூர் மாவட்டம், பெரியகாட்டுப்பாளையம் பகுதியில், கடலூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற பேருந்தை 3 பேர் மறித்துள்ளனர், பேருந்தை தேசிங்கு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கையில் கத்தி மற்றும் அரிவாளுடன் இருந்த 3 பேரும், ஓட்டுநர் தேசிங்கிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து அடாவடி செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ARREST: தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது


இதனை தட்டிக்கேட்ட ஓட்டுநர் தேசிங்கின் கையில் அரிவாளால் வெட்டிய மூன்று பேரும், நடத்துனரின் கழுத்தில் கத்தியைவைத்து பணப்பையை கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். அவர்களது மிரட்டலுக்கு பயந்த நடத்துனர் நவீன்குமார், அந்தப் பையை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதில், 1200 ரூபாய் பணம் இருந்துள்ளது. பணப்பையை பெற்றுக்கொண்ட மூவரும், நடத்துனரையும், ஓட்டுநரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 


இதுகுறித்து தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அடாவடியில் ஈடுபட்டது பெரியக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரித்திவிராஜன், சீனுவாசன் மற்றும் மருது என தெரியவந்தது. ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து மூவரையும் பிடித்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து இரு இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனர்.


ALSO READ | விசாரணை அறிக்கை தர 25 ஆயிரம் லஞ்சம் - பெண் இளநிலை உதவியாளர் கைது.


மூன்று பேர் மீது கொலை மிரட்டல், பணம் பறிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் இளைஞர்கள் மூவரும் நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR