50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட், கடந்த 2000-ம் ஆண்டு முதல் 50 சதவீத இடங்களைப் பெறுவதில் அட்சியமாக இருந்ததாகக்கூறி தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று தனியார் மருத்துவக்கல்லூரி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்ட ஐகோர்ட், இடஒதுக்கீடு இடங்கள் குறித்த தகவலை கல்லூரி இணையதளத்தில் வெளியிடவும் ஆணை பிறப்பித்துள்ளது.


இந்த உத்தரவு சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று கூறியுள்ள ஐகோர்ட், தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


இந்த ஒரு கோடி ரூபாயை கீழடி அகழ்வாய்ச்சிக்கு வழங்க தமிழக அரசுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கவும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.