மாணவிகளுக்கு ரூ.1000: திமுக அரசு அதிரடி..!
மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உயர்கல்வி உறுதித்திட்டம் வரும் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதியளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அதிரடியான பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது. குறிப்பாக கரோனா தடுப்பு, பெண்கள் நலன், கல்வித்துறை, மருத்துவம், தொழில் முதலீடு போன்றவற்றில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருவதாகவே தெரிகிறது. அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் மூலம் மாணவிகளின் உயர்கல்வி இடைநிற்றல் தடுக்கப்படும் என திமுக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு என்று இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்து. அது மட்டுமின்றி, மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
மேலும் படிக்க | 5 வருட சாதனை ஒரே ஆண்டில்..என்ன செய்தது திமுக.?
இந்நிலையில் இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உயர்கல்வி உறுதித்திட்டம் வரும் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும், கட்டண உயர்வு என புகார் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், நீட் தேர்விற்கு பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், கலந்தாய்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களுடன் வரும் 17ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறினார். மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் கலந்தாய்வுக்கு செல்போனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் படித்த பள்ளிகளிலேயே கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறினார்.
மேலும் படிக்க | சனிக்கிழமையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் - அரசு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR