தலைமை செயலகத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!
தலைமை செயலகத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும் என முதலவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
சென்னை: தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தினால் அதிகளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.மேலும் சென்னையின் பல்வேறு இடங்களிலும் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மரம் ஒன்று விழுந்துவிட்டது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் காவலர் கவிதா(40) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், இதில் மற்றொரு காவலர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மேலும் 5 நாட்களுக்கு மழை!
இதனை தலைமை செயலாளர் இறையன்பு சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் இறந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் நிவாரணம் வழங்க அறிவிப்பினை கூறிருந்தார். அந்த அறிக்கையின்படி முதல்வர் கூறியிருப்பதாவது , "இன்று (02.11.2021) காலை சுமார் 9.00 மணியளவில் தலைமைச் செயலகத்தின் முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் ஒரு பழமையான பெரிய மரம் ஒன்று இருந்தது.இது இந்த தொடர் மழையின் காரணமாக அடியோடு விழுந்துவிட்டது .
அந்த சமயம் , அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் திருமதி.கவிதா அவர்கள் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவத்தில் மரத்திற்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பறிபோனது என்ற துக்க செய்தியினை கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
மேலும் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே பரிதாபமாக உயிரிழந்த தலைமை பெண் காவலர் திருமதி. கவிதா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திடீர் சம்பவத்தால் உயிரிழந்த திருமதி.கவிதா அவர்களின், குடும்பத்தினருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ரொக்கத்தை வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று அந்த அறிக்கையில் தமிழக முதல்வர் கூறிருந்தார். தற்போது ரூ. 15 லட்சம் சேர்த்து மொத்தமாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ALSO READ கழிவறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண், பெண் சடலம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR