உலகெங்கிலும் நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஒவ்வொரு அரசும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.  அந்த வகையில் தமிழகத்தில் குறைந்து இருந்த நோய் பரவல் தற்போது அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.  அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவற்றை விதித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை !


அரசின் இத்தகைய கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவோர் மீது காவல்துறையினர் தக்க நடிவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் அத்துமீறி செயல்பட்டவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.  இதுகுறித்து காவல்துறை ஆணையர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினரால் 07/ 01/ 2022 முதல் கடந்த ஒரு வாரத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 3.45 கோடி ருபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  முக கவசம் அணியாமல் இருந்ததால் 1 லட்சத்து 64 ஆயிரத்து 329 நபர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 1910 நபர்கள், 1552 இடங்களில் தேவையின்றி கூடுதல் போன்ற விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



மேலும்  254 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதில் அதிகபட்சமாக சென்னை மாநகரில் முக கவசம் அணியாதவர், மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறியதற்காக 43 ஆயிரத்து 417 நபர்களிடமிருந்து 86 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.  வடக்கு மண்டலத்தில் 40 ஆயிரத்து 148 நபர்களிடமிருந்து 83 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.



தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை   29 லட்சத்து 15 ஆயிரத்து 948- ஆக உயர்ந்துள்ளது.   கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 10,988- பேர் குணம் அடைந்துள்ள நிலையில்,  தொற்று பாதிப்புக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரொனா தொற்றை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1,43,536- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 8,978- ஆக உயர்ந்துள்ளது. 


ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR