எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உற்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்.பி.கே. நிறுவனம் தமிழ்நாடு அரசின் அனைத்து விதமான சாலை ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் பல சாலை சம்பந்தமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உட்பட 30-க்கும் அதிகமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான சம்பந்தமான சோதனையில் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.


மேலும் சென்னை சேத்துப்பட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை முடிந்த பிறகு முழு விவரம் வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறினர்.


கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒன்றாக தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதியில் ரூ. 1300 கோடி அளவுக்கு கணக்கில் வராத ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.