’மோடியின் மெகா ஊழல்’ பட்டியல் போட்ட ஆர்.எஸ்.பாரதி
ஊழல் ஊழல் என்று பேசியே மெகா ஊழல் செய்துவிட்டார் பிரதமர் மோடி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றச்சாட்டியுள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரும்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி மற்றும் வடிகால் அமைத்தல் பணிகளின் திறப்புவிழா நிகழ்ச்சி மற்றும் தார்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை திறந்து வைத்த ஆர்.எஸ்.பாரதி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " தேர்தல் வருவதற்கு முன்பாக மோடி இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த தேர்தலின்போது பெட்ரோல் விலையை குறைத்து அறிவித்தார். தேர்தல் முடிந்ததும் பல மடங்கு பெட்ரோல் விலையை உயர்த்தினார். இதையெல்லாம் நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்.
மேலும் படிக்க | "பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?" எடப்பாடி பழனிசாமி கேள்வி!
ஏழரை லட்சம் கோடி ஊழல்
மோடி யார் என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும். பத்தாண்டு காலமாக அவர் ஒன்றும் செய்யவில்லை. ஊழல் என்று பேசி உலக மகா ஊழலை செய்துவிட்டார். ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்தவர் இந்தியாவில் இதுவரை யாரும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஊழல் செய்துள்ளார். இந்த ஊழல் வெளியாகி பத்து நாட்களாகிறது. இதுவரை அமித்ஷா, மோடி, அண்ணாமலை வாய் திறக்கவில்லை. இந்த மௌனம் சம்மததிற்கு அறிகுறி. ஊழலை ஒத்துக் கொண்டார்கள்" என தெரிவித்துள்ளார்.
சிஏஜி அறிக்கையில் வெளியான ஊழல்
அண்மையில் வெளியான சிஏஜி அறிக்கையில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் இருக்கும் பரனூர் சுங்கச்சாவடியில் 53 விழுக்காடு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாலம் கட்டுமானத் திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்யா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வுத் திட்டம், எச்ஏஎல் விமான வடிவமைப்புத் திட்டம் என இந்த 7 திட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி மிக தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | I.N.D.I.A. கூட்டணி: நான்காவது கூட்டம் தமிழ்நாட்டிலா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ