சென்னை : நேற்று ஒரேநாளில் மட்டுமே ரூ.480 கோடி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கியில் 4 சிறப்பு கவுன்ட்டர்களுடன் மொத்தம் 8 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. 


மேலும் ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகத்துக்கு மட்டுமே 270 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு ரூ.20 கோடி வீதம் ரூ.5,400 கோடி வந்துள்ளது. இதில் நேற்று மட்டும் தபால் நிலையங்கள், வங்கிகள் மூலம் ரூ.480 கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் வினியோகிக்கப்பட்டது. இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. இதையடுத்து அதிகபட்சமாக ரூ.2,000 வரை ஏ.டி.எம்.,களிலிருந்து எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.