சேலம்: கடந்த சில ஆண்டுகளாகவே பேராசிரியர்கள் நியமனம் செய்வதில் ஊழல் உள்ளிட்ட போன்ற சர்ச்சைகளில் இப்பல்கலைக்கழகம் சிக்கிவருகிறது.இதோடு இந்துத்துவா கருத்துக்களை திணிப்பதற்கான முயற்சியில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும் பல்கலைகழகத்தின் மீது அவ்வப்போது கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் போன்றோருக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே கடந்த ஜீன் 30ஆம் தேதி அன்று பல்கலைக்கழக வேந்தரும் , தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.ஜெகநாதனை நியமத்தார்.


இந்த நிலையில் கடந்த ஜீன் 30ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஒரு கருத்தரங்கம் நடைபெறுவதாக இருந்தது.அதற்காக பல்கலைக் கழக பதிவாளர் பெயரில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ”வரக்கூடிய 16.08.2021 அன்று "பெரியார் பல்கலைக்கழக கலைஞர் ஆய்வு மையத்தின் சார்பாக ஆட்சிப்பேரவை கூடத்தில் நண்பகல் 12.00மணிக்கு "வேதசக்கதி வர்மக் கலையும் பன்னாட்டு பின்புலம் என்ற தலைப்பில் பேராசிரியர் ந.சண்முகம் அவர்கள் சிறப்பு உரை நிகழ்த்தவுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


READ ALSO | அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும்- Madras HC


எனவே இந்த நிகழ்விற்கு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி தொடர்பான விளம்பர பதாகையும் பல்கலைக் கழகத்தில் இருக்கக்கூடிய வளாகத்தில்  வைக்கப்பட்டிருந்தது.


இந்த தலைப்பு குறித்து பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்கள் மூலமாகவும் துணைவேந்தரையும் தொடர்பு கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.இந்த தகவலை அறிந்த "திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில்  செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில்: பெரியார் பல்கலைக்கழகமா? இல்லை ஆர்.எஸ்.எஸ் (R.S.S) பல்கலைக்கழகமா என்று தலைப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.



அந்த பதிவில் கலைஞர் ஆய்வு மையத்திற்கும் வர்மக்கலைக்கும் என்ன தொடர்பு என்று நமக்குத் தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்(R.S.S) கருத்துக்களை அறிவியல் அல்லது தற்காப்பு கலை என்னும் பெயரில் திணிப்பதன் நோக்கம் என்று நமக்குத் தெரிகிறது.


அதுவும் இந்தக் கருத்தரங்கில் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பதிவாளர் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார்.அதாவது அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை வேண்டுகோளாக இல்லாமல் ஆணையாக விடுத்துள்ளார் இது என்ன நியாயம் என்று சுப.வீரபாண்டியன் கேள்வி  எழுப்பியுள்ளார்.


READ ALSO | அதிமுக உறுப்பினர்கள் தாமாகவே வெளியேறினர் – சபாநாயகர் அப்பாவு


ஒருமுறை பா.ஜ.கவைச்(BJP) சேர்ந்த எச்.ராஜா பல்கலைக் கழகத்திற்குள் வந்து நெடுநேரம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக செய்தி  செய்தி வந்தது. பெரியார் பல்கலைக்கழகத்திற்கும் இவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லாத போது இவர் எப்படி அங்கு கலந்துரையாடல் நடத்த முடியும்?


"பல்கலைக்கழகத்தில் இப்போது நடக்கின்ற செயல்களை பார்த்தால் இது "பெரியார் பல்கலைக்கழகமா! அல்லது ஆர்.எஸ்.எஸ்.(R.S.S) பல்கலைக்கழகமா? என்ற ஐயம் எழுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்தப் போக்கினை "திராவிட இயக்கத் தமிழர் பேரவை மிக கடுமையாக கண்டிக்கிறது என  முகநூல் பதிவில் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து திங்களன்று நடைபெறுவதாக இருந்த கருத்தரங்கம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது..!!!


Also Read | அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு வழக்கு திரும்ப விசாரிக்கப்படுகிறது - அண்ணாமலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR