சென்னை: ரூபெல்லா- மீசில்ஸ் தடுப்பூசி திட்டத்தை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூபெல்லா- மீசில்ஸ் நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தை தொடங்கப்பட்டது. 


இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் அதற்கு வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்துகள் குழந்தைகளின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அந்த தடுப்பூசியை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று சமூகவலைதளங்களில் கருத்துகள வைரலாக பரவின. 


இதையும் மீறி ரூபெல்லா- மீசில்ஸ் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் தொடங்கியது. சில இடங்களில் ஊசி போட்டுக் கொண்ட மாணவர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் பீதி அடைந்தனர். எனினும் இது மருந்து வேலை செய்கிறது என்பதற்கான அறிகுறிதான், இதை கண்டு பெற்றோர் அஞ்சத் தேவையில்லை என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.


இந்நிலையில் இந்த ரூபெல்லா- மீசில்ஸ் தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்தார்.