‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்களின் 113-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (27-09-2017) புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சி.பா. ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன், கதிர் இராஜேந்திரன், ஆன்றோர் அவையம் புலவர் மறத்தமிழ்வேந்தன், கொள்கைப்பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன், காஞ்சிபுரம் சஞ்சீவிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று புகழ்வணக்கம் செலுத்தினர்.


சி.பா. ஆதித்தனார்:-


சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். மேலும்  ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கியாவர்.


1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.


இவர் தனது 76-ம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார்.