தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியது. இதன் காரணமாக அனைத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் பல்வேறு இடங்களில், பல்வேறு மாவட்டங்களில் சோதனை நடந்து வருகின்றன. நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதேபோல், தென்காசி மாவட்டம் ராயகிரியில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன்(39) வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் 2019 ஆண்டு தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராகவும் போட்டியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்! மத்திய அரசை சாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!


யூடியூபர் தென்னகம் விஷ்ணு, கோவையில் இருக்கும் நாதக நிர்வாகி வீட்டிலும் NIA சோதனை நடத்தியுள்ளது. விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடப்படதாக கூறப்படுகிறது. ஓர் இடத்தில் தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களுக்கு விரிவடைந்தது. இதுவரை கோவை, சென்னை, சிவகங்கை, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. 


நாம் தமிழர் கட்சிக்கு அதிகளவில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் நிதி வருவதாக தொடர்ச்சியாக கூறப்படுகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் நாம் தமிழர் கட்சிக்கு நிதியுதவி அளிப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் விடுதலைப் புலிகள் மீண்டும் கட்டமைக்கப்படுதாக எழுந்த புகாரின் அடிப்படையில் என்ஐஏ பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சிலரை கைது செய்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் நிதி பரிவர்த்தனையில் சில முக்கிய தகவல்கள் என்ஐஏவுக்கு கிடைத்துள்ளது. 


அதன் தொடர்ச்சியாகவே நாம் தமிழர் கட்சிக்கான நிதி பரிவர்த்தனைகளை கண்காணித்து, இந்த சோதனையை என்ஐஏ தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஏதேனும் தவறான நடைமுறைகள் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தவும் என்ஏஐ திட்டமிட்டிருக்கிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் நிதி பரிவர்த்தனைகளை என்ஐஏ உன்னிப்பாக கவனித்து வருகிறது. விரைவில் என்ஏஐ சோதனைக்கான முழு பின்னணி தெரியவரும். 


மேலும் படிக்க | Health Sector: சுகாதாரத்துறைக்கு பட்ஜெட்டில் இவ்வளவு சலுகைகளா? குஷியில் ஆஷா பணியாளர்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ