வடிவேலு பாணியில் புல்லட்டை தூக்கிய காதல் ஜோடி! 75 நாட்களுக்குப் பிறகு கைது!
சேலத்தில் பைக் ஷோருமிலிருந்து புல்லட் வண்டியை திருடி சென்ற காதல் ஜோடியை கர்நாடகாவில் தமிழக போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தாதுபாய்குட்டை எனும் பகுதியில் பைக் ஷோரூம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஷோரூமிற்கு கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி இளம் காதல் ஜோடி ஒன்று வந்தது.
பின்னர் அந்த ஷோரூமிலேயே ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான புல்லெட் வண்டியை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அவர்களை நம்பிய ஷோரூம் ஊழியர் டெஸ்ட் டிரைவ் செய்து வர ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து புல்லட் வண்டியில் ஏறிய காதல் ஜோடி மின்னல் வேகத்தில் அங்கிருந்து நகர்ந்தனர். சற்று நேரம் ஆகியும் அவர்களை காணவில்லை. வண்டி குறித்து தகவலும் வரவில்லை.
சந்தேகித்த ஷோரூம் உரிமையாளரும், ஊழியரும் அவர்களை தேடி சென்றனர். ஆனால் அவர்களை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இருவரும் புல்லட்டுடன் மாயமாகியது தெரியவந்தது.
இதனையடுத்து, பைக்கை ஓட்டிப்பார்ப்பதாக எடுத்துக்கொண்டு மாயமாகிய காதல் ஜோடி குறித்து பைக் ஷோரூம் ஊழியர் ராம்பாலாஜி சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, பைக்குடன் மாயமான காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், புல்லட்டை திருடிக்கொண்டு மாயமானது பிரவீன் மற்றும் பிரித்தி ஆகிய காதல் ஜோடி என்பது தெரியவந்தது.
இந்த புகார் கொடுத்து 75 நாட்கள் ஆகிய நிலையில், தற்போது அந்த காதல் ஜோடி கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து பங்காருபேட்டைக்கு சென்ற போலீசார் அங்கிருந்த காதல் ஜோடி பிரவீன், பிரித்தியை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரவீன் (வயது 25) கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை அருகே உள்ள காரன்னஹள்ளியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் இருவரும் சேலம் காந்தி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்ட காதல் ஜோடியிடம் சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | ரயில் முன் குதித்த சிறுவனை பாய்ந்து காப்பாற்றிய போலீஸ்! வைரல் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR