இணையத்தில் தற்போது ஒரு காட்சி அதிவேகமாக வைரலாகி வருவதோடு பல தரப்பிலிருந்து பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. கடந்த மார்ச் 23ம் தேதியன்று மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள விட்டல்வாடி ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திகிலூட்டும் வீடியோவில், 18 வயது சிறுவன் ஒருவன் ரயில் முன் பாய்வதற்காக குதித்து தண்டவாளத்தில் நின்றவனை போலீஸ் கான்ஸ்டபிள் துணிந்து காப்பாற்றியுள்ளார். இந்த காட்சி முழுவதும் அந்த ரயில்வே நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க | கூட்டாளியே துரோகியான சோகம்; புலியிடம் சிக்கி சின்னாபின்னமான எருது..!!
இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த வைரல் வீடியோவில், 18 வயது சிறுவன் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருப்பதைக் காணலாம். சில வினாடிகளுக்குப் பிறகு, அவன் எதிரே வந்துகொண்டிருக்கும் மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலின் முன் குதிக்கிறான். அந்த சமயம் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஹிருஷிகேஷ் மானே என்பவர் அவரது உயிரை பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் உயிரைப் பணயம் வைத்து தண்டவாளத்தில் குதித்து சிறுவனைக் காப்பாற்றினார். சில நொடிகள் தாமதமாகி இருந்தாலும் இருவரின் மீதும் ரயில் ஏறி இருக்கும், அதற்கும் போலீஸ் அச்சிறுவனை காப்பாற்றிவிட்டார்.
#WATCH | Maharashtra: A police personnel saved a teenage boy's life by pushing him away from the railway track just seconds before an express train crossed the spot at Vitthalwadi railway station in Thane district. (23.03)
Video Source: Western Railway pic.twitter.com/uVQmU798Zg
— ANI (@ANI) March 23, 2022
மேலும் இந்த வீடியோவுடன் "ஜவானுக்கு சல்யூட்" என்று கேப்ஷன் பதிவிடப்பட்டுள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. சிறுவனை காப்பாற்றிய ஹிருஷிகேஷ் மானேவின் தைரியத்தை நெட்டிசன்கள் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். “இந்த போலீஸ் தான் உண்மையான ஹீரோ", “துணிந்த இதயத்திற்கு வணக்கம்” என்பது போன்ற பல்வேறு நேர்மறையான கமெண்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | சிறுத்தையுடன் ‘ஒரு போர்வைக்குள்’ உறங்கிய நபர்; இணையத்தை அதிர வைத்த வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR