தமிழகத்தில் புதிதாக வரவிருக்கும் பசுமை வழிச்சாலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை-சேலம் நகரங்களுக்கு இடையில் வரவிருக்கும் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து, சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சேலம் ஆட்சியர் ரோகிணி கேட்டுக்கொண்டுள்ளார்.


இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது,...


"இந்த பசுமை வழிச்சாலை திட்டமானது பொதுமக்களுக்கான திட்டம்; விவசாயிகளுக்கு நன்மை தரும் திட்டம். இத்திட்டதிற்காக ஆர்ஜிதம் செய்யப்படும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


நிலத்திற்கு மட்டும் அல்லாமல், நிலத்தில் இருக்கும் மரங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றிற்கும் இழப்பீடு வழங்கப்படும். இதுவரையில் பசுமை வழிச்சாலைக்கான நில அளவீடு நடைபெறுகையில் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியாக ஆதரவு அளித்துள்ளனர். எனவே பொதுமக்களிடம் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இத்திட்டத்திற்கு தேவையான நிலத்தை வழங்கும் நபர்களுக்கு எந்தவொரு சிறு பாதிப்பும் இன்றி அதிகபட்சமான இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரிவிட்டுள்ளார். மேலும் நிலம் வழங்குவோருக்கு அரசின் அனைத்து துறைகளிலும் நலத்திட்டங்கள், உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


குறிப்பாக நிலம் வழங்கு பொதுமக்களுக்கு பசுமை வீடு, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவைகளை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.