பாலியல் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சேலம் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தளவாய்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. தளவாய்பட்டி ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2018 ஆண்டி அக்டோபர் மாதம் 22-ந் தேதி வீட்டில் இருந்தபோது, சிறுமியை அதேபகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | மதுபோதையில் கார் ஓட்டிய முன்னாள் ராணுவ வீரர்! 3 சுங்கப் பணியாளர்கள் உயிரிழப்பு!
இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதுதவிர, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செயப்பட்டார். இது தொடர்பான வழக்கை கையில் எடுத்த தாழ்த்தப்பட்டோர் ஆணையம் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி முருகானந்தம் வழங்கிய தீர்ப்பில், குற்றவாளி தினேஷ்குமாருக்கு மரண தண்டனை விதிப்பதாக கூறினார். மேலும், அபராதமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அந்த தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவிட்டார்.
சேலம் நீதிமன்ற வரலாற்றில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவம் நடைபெற்றபோது கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட தினேஷ்குமார், தனக்கு மரண தண்டனை வழங்குங்கள் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | புழல் அருகில் பள்ளி சென்ற மூன்று சிறுமிகள் மாயம்: பீதியில் பெற்றோர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR