புதிய வரலாறு படைத்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவியர்கள்
75 பேரின் மருத்துவக்கல்வி கனவு நனவானது ஜலகண்டபுரத்தில் ஒரே அரசு பள்ளியில் படித்த 9 மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவப் படிப்புக்கான ஆணையைப் பெற்றனர்.
சேலம்: மருத்துவர்...! இந்த வார்த்தை பலரின் இலட்சியக் கனவுகள் எனலாம் குழந்தைகள் சிறுவயதில் இருக்கும் போதே அவர்களை அழைத்து நீங்கள் என்னவாக வருவீர்கள் என்று கேட்டால் டாக்டராக வருவேன் என்பதுதான் முதல் வார்த்தையாக இருக்கும்.
கடந்த காலங்களில் இந்த வார்த்தை எட்டாக்கனியாக இருந்தாலும் தற்போது அரசு பள்ளியில் படித்தால் மருத்துவர் கனவு நிச்சயம் என்ற நிலைக்கு தமிழக அரசு வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக கிராமப்புறங்களில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அதிக அளவில் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக அரசு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இதன் விளைவாக இன்று நூற்றுக்கணக்கான கிராமப்புற அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவ கனவை நனவாக்கி வருகின்றனர்.
கல்லுடைக்கும் தொழிலாளி முதல் பூ விற்ப்பவரின் மகள் வரை தற்போது மருத்துவ கனவு நனவாகி வருகிறது. நீட்தேர்வு என்ற பெரும் அச்சம் மாணவ மாணவிகள் மத்தியில் இருந்தாலும் அதனோடு வாழ பழகிக்கொண்டு விட்டு விட்டால் எதுவும் எளிது என்பதற்கேற்ப தற்போது நீட் தேர்வை சுக்குநூறாகி அதிலும் வெற்றியைக் கண்டுள்ளனர் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள்.
செல்வந்தர்கள் மற்றும் பணக்காரர்களுக்கு மட்டுமே மருத்துவ கனவு என்பது இருந்த நிலையில், தற்போது குப்பனுக்கும் சுப்பனுக்கும் அது சாத்தியமானது தான் தமிழக அரசு செய்த பெரும் சாதனை. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
ALSO READ | வேளாண் சட்டத்தை போல நீட்டை திரும்பப் பெற மாட்டோம்- அண்ணாமலை
அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி முதலில் மருத்துவ கலந்தாய்வு சென்னையில் நடத்தப்பட்டது. இதில் 437 மருத்துவ படிப்புகளுக்கு 107 பிடிஎஸ் இடங்கள் என 544 இடங்களுக்கு தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கல்லூரிகளில் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் 1180 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து, ஆயிரத்து 135 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 148 பேர் தேர்ச்சி பெற்று மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்றனர்.
முதல் கட்டமாக கடந்த மூன்று நாட்களாக சென்னையில் நடந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வில் சேலம் மாவட்டத்திலிருந்து 75 மாணவிகள் பங்கேற்று மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற்று உள்ளனர். இதில் 66 பேர் எம்பிபிஎஸ் படிப்பிலும், 9 பேர் பிடிஎஸ் படிப்பிலும் சேர்ந்துள்ளனர்.
ALSO READ | தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக எம்.பி. டி ஆர் பாலு பரபரப்பு பேட்டி
தர வரிசையில் நான்காவது இடம் பிடித்த மாணவி வெங்கடேஸ்வரி சேலம் அரசு மோகன் குமார் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார். 10வது இடம் பிடித்த மாணவர் கலையரசன் சென்னை எம் எம் சி கல்லூரியில் சேர்க்கை பெற்றார். இப்படி 56 மாணவ மாணவிகள் சென்னை, கோவை, நாமக்கல், திண்டுக்கல், கரூர், வேலூர் என பல்வேறு கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர் பல் மருத்துவ படிப்பில் சேலம் அரசு பள்ளி மாணவி மாணவிகளான ராஜேஸ்வரி சுபத்ரா பிரியதர்ஷினி தீபா திவ்யா சிவபிரகாஷ் ரேணுகா அபிநயா ஆகிய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
இதில் சிறப்பு என்னவென்றால் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கலந்தாய்விற்கு 11 மாணவர்கள் தகுதி பெற்றனர். இதில் ஒரு மாணவி மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வில்லை மீதி உள்ள 10 மாணவிகள் விண்ணப்பித்தனர்.
மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று எம்பிபிஎஸ் படிப்பில் மாணவிகள் லாவண்யா, சந்தியா, முகிலா, ராகவர்த்தனி, காயத்ரி, வைஷ்ணவி, பிரியா, ஹாமலதா, கஸ்தூரி ஆகிய 9 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவி காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். சாதனை படைத்த ஜலகண்டாபுரம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களும் முதன்மைக் கல்வி அலுவலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ | முதுகலை நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை
அரசு பள்ளி மாணவர்கள் அதிகப்படியான மாணவர்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 75 மாணவர்கள் சேர்ந்து மாநில அளவில் மாவட்டங்களுக்கிடையே முதலிடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து 28 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். அதுவே நடப்பாண்டு அதிக எண்ணிக்கையாக இருந்தது.
தற்போது 75 மாணவ மாணவிகள் இடம் பிடித்துள்ளது சேலம் மாவட்டத்தின் புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளது. இதனால் அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாணவிகளை பாராட்டி வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக அளவில் கிராம புற மாணவ மாணவிகள் 75 பேருக்கு மருத்துவ கல்வி நனவானது சேலம் மாவட்ட மக்களை பெருமை அடைய செய்துள்ளது.
ALSO READ | நீட் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பாக பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR