பாலியல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை. பொறுப்பு பதிவாளர் கைது
Salem Periyar University : ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பொறுப்பில் கோபி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவி ஒருவரை ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் வகுப்பு இருப்பதாகக் கூறி பல்கலைக்கழகத்திற்கு வரச் சொல்லி உள்ளார்
இதனையடுத்து மாணவி தனக்குத் துணைவியாக உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது உறவினரை வெளியில் இருக்க சொல்லிவிட்டு மாணவியை மட்டும் தனது ஓய்வு விடுதிக்கு வரவழைத்து கோபி பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பதிவாளர் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக மாணவி தனது உறவினரிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சில்மிசம் செய்த முதியவரை புரட்டி எடுத்த பெண்; குவியும் பாராட்டுகள்
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர், கோபியை சராமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அடையாளம் தெரியாத மூன்று பேர் தன்னைத் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக பதிவாளரை அதிரடியாகக் கைது செய்தனர்.
மேலும் படிக்க | திருவள்ளுவர் மாணவி தற்கொலை - பள்ளி வளாகத்திற்குள் வைத்தே ஆசிரியைகளிடம் விசாரணை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ