சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது... முழு பின்னணி என்ன?
Tamil Nadu Latest News: சேலம் பெரியார் பல்கலைக்கழகளை ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி அரசு பணத்தை செலவிட்டதாக வந்த புகாரையடுத்து அதன் துணை வேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்.
Tamil Nadu Latest News: சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தை சுற்றி பல ஆண்டுகளாக சர்ச்சைகளும் பிரச்னைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் செய்யும் முறைகேடுகளும் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளும் அவ்வப்போது பொதுவெளியில் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
ஆனால் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை மெத்தனம் காட்டி வந்தது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் பல்கலைக்கழகத்தின் நடைபெறும் ஊழல்கள் முறையீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. பதிவாளர் முதல் கீழ்நிலை ஊழியர் வரை பணியிடங்கள் நிரப்புவதில் வெளிப்படைதன்மை என்பது இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்போது பல்கலைக்கழக ஊழியர்கள் வெளிச்சம் போட்டு காட்டினர்.
சமீபத்தில் கூட பணியாளர்கள் நிரப்புவதில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றாதது பல்கலைக்கழக பேராசிரியர் ஆராய்ச்சி படிப்பு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கெல்லாம் காரணம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பில் இருந்து வரும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெக்னாதன் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ரகசியங்களை அவிழ்த்துவிட்டால் பழனிசாமி சிறை உறுதி: ஓபிஎஸ் மிரட்டல்
வழக்கறிஞர் கொடுத்த புகார்
அந்த வகையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசராக இருந்த இளங்கோவன் என்பவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை பட்டியலிட்டு ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்திலும் இளங்கோவன் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இன்று அதிரடி நடவடிக்கைகளை மேற்கொணடுள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்து கொண்டு தனியாக நிறுவனம் தொடங்கி அந்த நிறுவனத்திற்கு பல்கலைக்கழக அதிகாரிகளை கொண்டு செயல்பட வைத்து, அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதும் கல்வி வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாக எதையும் செய்யாத நிலையில், தன்னுடைய சொந்த நிறுவனத்தை லாபம் பெற செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும், விதிமீறல் செய்தது குறித்து புகார்கள் துணிவேந்தர் மீது இருந்தது.
அதிரடி நடவடிக்கை
இந்நிலையில், இன்று துணைவேந்தர் ஜெகநாதன் (Periyar University Vice Chancellor Arrested) அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைதுக்கு பிறகு இதற்கு பின்புலமாக உள்ள பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் துணை நிலை அதிகாரிகள் ஆகியோரும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் குழு இருந்தாலும் பல்கலைக்கழக துணைவேந்தரே தனியாக சிண்டிகேட் அமைத்து ஊழலில் ஈடுபட்ட சம்பவமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் போல் மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை இதே சட்ட ஆலோசகர் இளங்கோவன் முன்வைத்துள்ள சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையை தீவிர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ