பம்பை அகற்றாமல் தார் சாலை போடப்பட்ட வினோதமான சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவோடு இரவாக இது அகற்றப்பட்டதால் பரபரப்பு இன்னும் கூடியது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் தற்போது சாலைகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 28 வது கோட்டத்துக்குட்பட்ட அப்புசாமி தெருவில் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்த சாலையை மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


இதன் அடிப்படையில் அனைத்து பகுதிகளும் தார் சாலைகளாக மாற்றப்பட்டன. அப்போது சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து நிலையில் இருந்த ஆழ்துளை போர்வெல் ஒன்றும் இருந்தது. 



தார்சலை போட்ட ஒப்பந்ததாரர்கள் இந்த போர்வெல் பம்பையும் அகற்றாமல் அப்படியே போர்வெல்லையும் சேர்த்து தார் சாலையை போட்டுள்ளனர்.



மேலும் படிக்க | போலி கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர் மூலம் நூதன பண மோசடி! ஊர்காவல் படை வீரர் கைது 


ஒப்பந்ததாரர்களின் இந்த நடவடிக்கை செவ்வாய்பேட்டை வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்த தகவல் காட்டுதீ போல் பரவியதைடுத்து ஒப்பந்ததாரர்கள் இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட போர் வெல்லை அகற்றி அதன் மீது மண்ணைக் கொண்டு மூடி உள்ளனர்.



ஒப்பந்ததாரரின் இந்த நடவடிக்கை பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் போர் வெல்லை அகற்றாமல் சாலை போட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது சேலத்தில் போர்வெல் மீது போடப்பட்ட தார் சாலை இரவோடு இரவாக அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி பள்ளியில் ஆவணங்களை தீ வைத்து கொளுத்திய நபர் கைது