திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரமுயரத்த பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மருத்துவமனை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக, QPMS என்கிற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது‌. அந்த வகையில் ஆந்திராவை சேர்ந்த இந்த தனியார் நிறுவனம் சார்பில் பழனி அரசு மருத்துவமனை பராமரிப்பு பணிகள், பாதுகாப்பு பணிகள், எலக்ட்ரிசியன் மற்றும் பிளம்பர் பணிகளுக்காக தினக்கூலி அடிப்படையில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு 549 ரூபாய் வழங்கவேண்டும் என தமிழக அரசு அறிவிததுள்ளது. ஆனால் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் மட்டுமே தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது‌. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று காலை பழனி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அனைவரும் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை நுழைவாயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கூறியதாவது :-


மேலும் படிக்க | நடிகரின் புகைப்படத்தை பயன்படுத்தி பெண்களை ஏமாற்றிய ஈரோடு இளைஞர்கள்!


பழனி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதாகவும், இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட நாற்பது பேர் வரை பணிபுரிவதாகவும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பராமரிப்பு முதல் கழிவறை சுத்தம் செய்வது வரையிலான அனைத்து பணிகளையும் தாங்கள் செய்து வருவதாகவும், கழிவறை நிறைந்துவிட்டால், உபகரணங்கள் இன்றி கையை விட்டு சுத்தம் செய்வதாகவும், இதற்கு தேவையான கையுறை முதல்கொண்டு எவ்விதமான உபகரணங்களும் தனியார் நிறுவனம் வழங்கவில்லை என்றும் தெரிவித்தனர். 


மேலும்‌ கொரோனா காலத்தில் செய்த பணிக்கான ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மேலும் தங்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் தினக்கூலியாக 545 ரூபாய் அடிப்படை சம்பளமாக கொடுக்கவேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும், இதுவரை முறையாக சம்பளம் கொடுக்காமல் நாள் ஒன்றுக்கு 200 ரூபாயும், அதற்கும் குறைவாகவுமே சம்பளம் வழங்குவாதாக தெரிவிக்கின்றனர். 


தனியார் நிறுவனம் தங்களுக்கு சரியான முறையில் தங்களை நடத்துகிறதா என கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு அதிகாரிகளும் தங்களை கண்டு கொள்வதே இல்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். 


எனவே தமிழக அரசு தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பழனி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் அனைவரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் பாதிக்க பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு! அருமை அண்ணன் வைகோ எழுதிய கடிதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ