சசிகலா குடும்பத்தை பொறுத்தவரை முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் விவசாயம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல் முன் எப்போதும் இல்லாத அளவு, ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி அறிவிக்கப்பட்டது.


இந்த பட்ஜெட் குறித்து வைகோ உள்ளிட பல அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.


இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


பாராளுமன்றத்தில் பட்ஜெட் உரை இந்தி, ஆங்கிலத்தில் படிக்கப்பட்டுள்ளதை குறை கூற முடியாது. இது மத்திய அரசு கையாளும் மொழியாகும்.


>மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மக்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. 


>தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சம் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 


>வரி கழிவு ரூ.40 ஆயிரம் தந்துள்ளனர். இது போதாது அதிகமாக தரவேண்டும். 


>கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிசாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 


தொடர்ந்து பேசிய அவர், சசிகலா குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் தவிர்த்து மற்றவர்களுடன் இணக்கமாக செல்லும் சூழ்நிலை உள்ளதாக வந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது. என்னைப் பொறுத்தவரை சசிகலா குடும்பத்துடன் எந்த சூழ் நிலையிலும் இணக்கமாக செல்ல வாய்ப்பு இல்லை, முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம். இதுதான் எங்களது நிலைப்பாடு இவ்வாறு அவர் கூறினார்.