சென்னை அசோக் நகரில்  அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்த வி .கே. சசிகலா அவரது உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “பண்ருட்டி ராமசந்திரன் எனது மூத்த அண்ணன் எனவே பார்க்க வந்தேன். அரசியல் விஷயமாக இருவரும் கலந்து பேசினோம். அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள்தான். அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. எம்ஜிஆர் சாதி , மதம் பார்த்து கட்சியை தொடங்கவில்லை; அந்த அடிப்படை கொள்கை எங்கள் மனதில் இப்போதும் இருக்கிறது.  அதிமுக என்பது நிறுவனம் அல்ல. எல்லோருக்குமானது. கட்சியில் இருக்கும் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதை நிலைநிறுத்துவது எனது கடமை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுகவில் தற்போது உள்ள சிக்கல்கள் அனைத்தும் காலப்போக்கில் சரியாகிவிடும் என்பது திடமான நம்பிக்கை. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகும் இப்படி நடந்தது , பின்னர்  ஒரு காலத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்தனர். அதுபோல மீண்டும் நடக்கும். நீங்கள் குறிப்பிடுவது போல நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்புகூட  அனைவரும் இணையக்கூடும்.


மேலும் படிக்க | அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் உயிரிழப்பு - அரசுக்கு சீமானின் வலியுறுத்தல்


தொண்டர்கள் நினைப்பதுதான் எனது செயல்பாடாக இருக்கும். எனது பயணத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. திமுகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கின்றனர்.


மேலும் படிக்க | ‘அப்போது ‘கோ பேக் மோடி', இப்போது ‘கம் பேக் மோடி'யா?’: கேள்வி கேட்கும் ஆர்பி உதயகுமார்


தொண்டர்களின் எண்ணப்படி எனது தலைமையில் அதிமுக மீண்டும் இணைவதற்கு நிச்சயமாக வாய்ப்பு  இருக்கிறது. ஏனெனில் தொண்டர்களின் எண்ணம் அதுதான் " என்றார்.


மேலும் படிக்க | பராமரிப்பு இல்லாத பேருந்தை இயக்க சொல்லி அதிகாரிகள் அழுத்தம் - உருக்கமான வீடியோ


மேலும் படிக்க | ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தலாமா ? - வி.சி.க வன்னியரசு கேள்வி


மேலும் படிக்க | காதல் மனைவியை ஆந்திரா கூட்டிச்சென்று கணவன் செய்த காரியம்... திடுக்கிடும் வாக்குமூலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ