ஜனவரி 27-க்குள் சசிகலா விடுதலை: சசிகலா தரப்பு நம்பிக்கை
தமிழகத்தின் அரசியல் சூழல் சசிகலாவின் வருகைக்குப் பிறகு மாறுமா? சசிகலாவின் ஆளுமை ஆளும் கட்சிக்கு ஆட்டம் கொடுக்குமா? முன்னர் சசிகலாவிற்கு இருந்த அதே அளவு செல்வாக்கு இன்னும் உள்ளதா?
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே. சசிகலா ஜனவரி 27 அல்லது அதற்கு முன்னர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அவரது ஆலோசகர் என்.ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
1994-95 ஆம் ஆண்டிற்கான வருமானம் தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் வருமான வரித் துறையால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கின் விசாரணையின் போது மெட்ராஸ் உயர்நீதிமன்ற (Madras High Court) நீதிபதிகள் எம். துரைசாமி மற்றும் டி.வி.தமிழ்செல்வி ஆகியோருக்கு முன் இது தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது, திருமதி சசிகலாவின் (VK Sasikala) வழக்கறிஞர் நீதிமன்றத்தில், தான் அவரை சிறையில் கடைசியாக சந்தித்து சுமார் 11 மாதங்கள் ஆகிவிட்டன என்று கூறினார். பெங்களூருவில் உள்ள சிறையில் சொத்து குவிப்பு வழக்கிற்காக சசிகலா நான்கு ஆண்டு கால சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
ALSO READ: நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?
இந்த மாத இறுதிக்குள் அவர் விடுவிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, வரி வழக்கை பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு சசிகலாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார். அப்படி செய்தால், வழக்கு குறித்து தன்னால் தன்னுடைய க்ளையண்டிடமிருந்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
சசிகலாவின் வழக்கறிஞர் சமர்பித்த கோரிக்கைகளையும் விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்ற அமர்வு, வரி தொடர்பான விசாரணை விஷயத்தை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது.
தமிழக சட்டமன்ற தேர்தல்களுக்கு (TN Assembly Elections) இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சசிகலாவின் விடுதலை, பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தின் அரசியல் சூழல் சசிகலாவின் வருகைக்குப் பிறகு மாறுமா? முன்னர் சசிகலாவிற்கு இருந்த அதே அளவு செல்வாக்கு இன்னும் உள்ளதா? சசிகலாவின் ஆளுமை ஆளும் கட்சிக்கு ஆட்டம் கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!!
ALSO READ: ‘கொரோனா வைரசை தமிழக அரசு கையாண்ட விதம் பாராட்டுக்குரியது': Harsh Vardhan
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR