நடிகர் ரஜினிகாந்த் உடன் சசிகலா திடீர் சந்திப்பு!
சென்னை, போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று சசிகலா சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது மரியாதை நிமித்தமாக சந்திப்பு என கூறப்படுகிறது.
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளிவந்த உடன், அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். ஆனால், அதன் பிறகு, அவ்வப்போது தனது இருப்பை வெளிப்படுத்தும் வகையில், அறிக்கைகள், ஆடியோ டேப்புகள் வெளியீடு போன்றவற்றின் மூலம் சசிகலா பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னை, போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று சசிகலா சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது மரியாதை நிமித்தமாக சந்திப்பு என கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் உடல் நலத்தை விசாரிப்பதற்காகவும், கலை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும் சசிகலா சென்று இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்த போது ரஜினிகாந்தின் மனைவி லதா உடன் இருந்தார்.
முன்னதாக, அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பர் என்று கட்சியின் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, அதன் கீழ் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவுக்குள் சசிகலா குழப்பங்களை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
Telegram Link: https://t.me/ZeeNewsTamil