சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். வரும் 7 அல்லது 9-ம் தேதி அவர் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். 


தமிழகத்தின் 3-வது பெண் முதல் முதலமைச்சர் என்ற பெருமையையும் சசிகலா தனதாக்குகிறார். 


தமிழகத்தின் முதல் பெண் முதல் அமைச்சர் - ஜானகி ராமச்சந்திரன் ஆவார்.


மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 5 முறை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். 


இவரை தொடர்ந்து மூன்றாவதாக சசிகலா முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார். மூன்று பேரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.