சசிகலா சொல்லும் நரகாசுரன் யார்? அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என மேற்கோள்காட்டி தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய சசிகலா.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்த சசிகலா அ.தி.மு.க.வை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறைத்தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலா (Sasikala), அதிமுக வில் சலசப்பை ஏற்படுத்துவார் அல்லது அவருக்கு கட்சியில் பதவியோ வழங்கப்படும் என்றும் கருதி அமமுக தொண்டர்களும் அதேபோல அதிமுக அதிருப்தியிலிருந்த சில நிவாகிகள் மற்றும் தொண்டர்களும் பெங்களூரு முதல் சென்னை வரை மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர்.
ஆனால் இதற்கு எதற்கும் வளைந்து கொடுக்காத EPS , OPS சசிகலாவை மீதும் கட்சியில் சேர்க்கும் எண்ணமே இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அமமுக கட்சியில் தன்னை இணைந்துக் கொண்டு EPS ,OPS இருவருக்கும் எதிராக அரசியல் செய்வார் எனவும் ஒருதரப்பினர் எதிர் பார்திருந்தனர். இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக "தான் அரசியலை விட்டு தள்ளி இருப்பதாக" அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் (AIADMK) தோல்விக்கு பிறகு சில அதிமுக தொண்டர்களிடத்திலும் சில நிவாகிகளிடத்திலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிமுக-வை காப்பாற்ற நிச்சயம் வருவேன் என அவர் பேசிய ஆடியோ வெளியாகி அதிமுக-வில் புயலைக் கிளப்பியது. அதேநேரத்தில் சசிக்கலாவுடன் பேசியவர்களை அதிமுகவிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டனர்.
ALSO READ | அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்; சர்ச்சையாகும் விவகாரம்
சசிகலா சிறையிலிருந்து வெளியில் வந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாமதிக்கு செல்வார் என்பதால், திடீரென பராமரிப்பு பணிக்காக ஜெயலலிதாவின் சமாதி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு மீண்டும் ஜெயலலிதா சமாதி பொம்மக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டபோது சசிகலா அங்கு செல்லவில்லை.
அதேபோல டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனக்குறிப்பிட்டு, அம்மா வழிநின்று கழகம் காப்போம் கரம் கோர்ப்போம், பகை வெல்வோம் என்ற தலைப்பில் திடீரென அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதிமுக-வின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சசிகலா கடந்த 16- ஆம் தேதி எம்.ஜி.ஆர். (MGR), ஜெயலலிதா நினைவு (Jayalalitha Memorial) இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். 17 ஆம் தேதி தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கும், ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.
மேலும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் "அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா" என பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்ட சம்பவம், EPS ,OPS தலைமையிலான அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம் என்பதை சுட்டிக்காட்டி பேசி வரும் சசிகலா, தனது நடவடிக்கை மூலம் அ.தி.மு.க. தொண்டர்களை தனது பக்கம் பெரிய அளவில் இழுத்து விடலாம் என்று காய்களை நகர்த்தி வருகிறார்.
ALSO READ | ஓபிஎஸ் ஒரேபோடு.. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும்!
இதற்கிடையே கடந்த மாதம் 25 ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அவர்களை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் மக்களின் கையில்தான் உள்ளது என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை நிர்வாகிகள்தான் முடிவெடுப்பார்கள். அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும் என்றும் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னால் அமைச்சர் ஜெயக்குமார், "சசிக்கலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர் தான் OPS. மீண்டும் சசிகலாவை அதிமுகாவில் சேர்த்துக்கொள்ள முடியாது என திட்டவட்ட மாக தெரிவித்தார்.
ALSO READ | விரைவில் வருகிறேன் எல்லோரையும் சந்திக்கிறேன்! - சசிகலா!
இந்நிலையில் "தேவர் ஜெயந்தி விழா"விற்கு சசிகலா சென்ற காரில், ஜெயலலிதா பயன்படுத்திய கார் மற்றும் பிரச்சார வேன் அகியவற்றில் பயணம் மேற்கொண்டார். அவ்வாகனங்களில் அதிமுக கொடி எப்பொழுதும் போல் இருந்தது. இதன் தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இன்றே வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா அதில் "நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தத் திருநாளில், சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும், அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம் தீபாவளியை" என்று குறிப்பிட்டுள்ளார்
இந்த வாக்கியகள் அவர் முன்னெடுக்கும் அரசியலை சார்ந்து உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த வாழ்த்து அறிக்கையின் மூலம் அதிமுக கட்சியில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ALSO READ | எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டு: ஆட்டம் ஆரம்பமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR