திமுக கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது : ஒபிஎஸ்-இபிஎஸ் கண்டனம்

லஞ்ச ஒழிப்புத்‌ துறை சோதனை என்ற பெயரில்‌ திமுக அரசு, தனது பழிவாங்கும்‌ உணர்ச்சிகளை மீண்டும்‌ பகிரங்கப்படுத்தி, வக்கிரநடவடிக்கைகள்‌ மூலம்‌ மகிழ்ச்சியைத்‌ நேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது:   ஒபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 18, 2021, 05:22 PM IST
திமுக கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது : ஒபிஎஸ்-இபிஎஸ் கண்டனம் title=

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் ரெய்டுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

முன்னதாக இன்று காலை முதல், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான 48  இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகக்கூறி வழக்கு பதிவு செய்தனர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரின் வீடு, அளிவலகம் உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

அதிமுக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அலைகடல் ஓய்வதுமில்லை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சாய்வதுமில்லை, முன்னாள் அமைச்சர் டாக்டர் C. விஜயபாஸ்கர் MLA அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் "ரெய்டு" க்கு கண்டனம்!" எனப் பதிவிட்டு அறிக்கையும் பகிர்ந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் ரெய்டுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு தனது பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்வது கண்டனத்திற்குரியது என ஒபிஎஸ்-இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது, "கழக அமைப்புச்‌ செயலாளரும்‌, புதுக்கோட்டை வடக்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ அமைச்சருமான டாக்டர்‌ அவர்கள்‌ தொடர்புடைய இடங்களிலும்‌, அவரது உறவினர்கள்‌ வாழும்‌ வீடுகளிலும்‌ லஞ்ச ஒழிப்புத்‌ துறை சோதனை என்ற பெயரில்‌ திமுக அரசு, தனது பழிவாங்கும்‌ உணர்ச்சிகளை மீண்டும்‌ பகிரங்கப்படுத்தி, வக்கிரநடவடிக்கைகள்‌ மூலம்‌ தற்காலிசு மகிழ்ச்சியைத்‌ நேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

ALSO READ |  அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ பொன்விழா கொண்டாடி வரும்‌ எழுச்சிமிகு தருணத்தில்‌, நேற்று (17:10.202) தலைநகர்‌ சென்னையிலும்‌, மாநிலத்தின்‌ மற்ற பகுதிகளிலும்‌ நடைபெற்ற உற்சாகமான விழாக்களைக்‌ கண்டு மனம்‌ பொறுக்கு முடியாத திமுக, விடிந்தவுடன்‌ காவல்‌ துறையை ஏவிலிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில்‌ கோரத்‌ தாண்டவம்‌ ஆடிக்கொண்டிருக்கிறது.

 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ ஆழம்‌ காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம்‌; இந்த இயக்கம்‌ திமுக-வின்‌ முயற்சிகளால்‌ முடங்கிடவோ முடியாமற்போகவோ, ஒய்ந்து, சாயப்போவது இல்லை.

எத்தனை கழக நிர்வாகிகள்‌ மீது என்னென்ன வழக்குகள்‌ போட்டாலும்‌, அவதூறு பரப்பினாலும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ எதிர்காலத்தில் அடையப்போகும்‌ வெற்றிகளை யாராலும்‌ தடுத்த நற்திவிட முடியது என்பதைத்‌ தெரிவித்து கொள்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ALSO READ |  மீண்டும் அரசியலில் நுழைகிறாரா சசிகலா? அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News