ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரு அணியாக திரண்டுள்ளனர். இவர்கள் சசிகலாவை தங்கள் கட்சிக்குள் அழைத்து வருகின்றனர். ஆனால் சசிகலாவோ தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று தான் அடையாளப்படுத்தி வருகிறார். இதற்கு நடுவே எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பேசப்படுகிறது. இதுகுறித்த பல தகவல்களை விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல அவரது ஆதரவாளர்கள் தி.நகரில் உள்ள அவரது வீட்டு வாசல் முன்பு குவிந்தனர். வழக்கமாக ஆதரவாளர்களை சந்திக்கும் அவர், இந்த முறை கண்டிப்பாக நோ சொல்லி விட்டார். இதனால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர். இந்த நிகழ்வு சாதாரணமானது தான் என்றாலும், அதற்கு பின்னால் பல விஷயங்கள் அடங்கி உள்ளதாக கூறுகின்றனர் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். 



மேலும் படிக்க | சென்னை மக்களே அலர்ட்... 2 நாள்களுக்கு குடிநீர் வராது... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?


எடப்பாடி பழனிசாமி என்னதான் கோடிகளில் செலவு செய்து லட்சக்கணக்கான மக்களை மதுரை மாநாட்டில் கூட்டினாலும், அது பெரிய அளவு எடுபடவில்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை தொடர்ந்து வசைபாடி வருவதால்,  தென் மண்டலத்தில் இபிஎஸ்-க்கு செல்வாக்கு குறைந்துவிட்டதாக அதிமுகவினர் கருதுகின்றனர். இதில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டதால், அதிமுகவின் வாக்குகள் சிதறின. பல தென் மாவட்டங்களில் அதிமுகவின் தோல்விக்கு சொற்ப வாக்கு எண்ணிக்கையே காரணமாகவும் அமைந்தது. இப்போது ஓபிஎஸ்-ம் அதிமுகவில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டார். இதனால் முக்குலத்தோர் வாக்கு வங்கியை சுத்தமாக இழந்து நிற்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக. 



அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், எப்படியாவது இரண்டை இலக்க எண்ணில் எம்.பி.க்களை பெற்றாக வேண்டும் என்பதில் முடிவாக உள்ளாராம் இபிஎஸ். ஏற்கனவே கூட்டணியில் உள்ள பாஜக அதிக சீட் கேட்பதால் குழப்பத்தில் உள்ளார். இதில் தென் மண்டலத்தில் இப்படி ஒரு பிரச்சனை என்றால் இது மேலும் தலைவி என்பதால், புது ரூட்டை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம் இபிஎஸ். 


என்ன தான் சசிகலாவை பல இடங்களில் இபிஎஸ் விமர்சித்தாலும், இதுவரை இபிஎஸ் குறித்து எந்த விமர்சனத்தையும் சசிகலா முன்வைத்தது இல்லை. அதிமுகவின் ஒற்றுமை தான் முக்கியம் என்பதில் தீர்க்கமாக உள்ளார் சசிகலா.  அதனை கருத்தில் கொண்டு சசிகலாவுக்கும் இபிஎஸ்க்கும் நெருக்கிய முன்னாள் அமைச்சர் ஒருவர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஓபிஎஸ், டிடிவி தினகரன் மீது கடும் கோபத்தில் உள்ள இபிஎஸ் கண்டிப்பாக அவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இல்லை. அதனால் சசிகலாவை எப்படியாவது அதிமுகவுக்குள் அழைத்து வந்துவிட்டால், தென் மண்டலத்தில் வாக்குகளை அள்ளிவிடலாம் என்பது தான் திட்டமாம். 


ஆனால் இபிஎஸ் இரு மனதாக இருப்பதால், என்ன முடிவெடுப்பார் என்பது தெரியவில்லை. அதோடு சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் என்று இபிஎஸ்-ஐ எதிர்கட்சிகளும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களும் வசைபாடி வருகின்றனர். இந்த கலங்கத்தை சசிகலாவை கட்சிக்குள் அழைத்து கெளரவமாக ஒரு பதவியை கொடுத்து வாயடைக்க செய்ய இது இபிஎஸ் முன் இருக்கும் பிரகாசமான வாய்ப்பு. சசிகலாவும் இபிஎஸ் உடன் இணைவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியுள்ளாராம். என்ன தான் செய்யப்போகிறார் இபிஎஸ் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.


மேலும் படிக்க | முதல்வர் பொய் பேசுகிறார்... 24 மணிநேரத்தில் வெள்ளை அறிக்கை வரும் - அண்ணாமலை அட்டாக்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ