மதுபோதையில் கார் ஓட்டிய முன்னாள் ராணுவ வீரர்! 3 சுங்கப் பணியாளர்கள் உயிரிழப்பு!
சாத்தூர் அருகே மது போதையில் காரை ஓட்டி 3 சுங்கப் பணியாளர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் சந்திப்பு சாலையோரத்தில் பராமரிப்பு பணி நடைப்பெற்று வந்தன.
இந்த பராமரிப்பு பணிகளில் திருவிருந்தான்பட்டியை சேர்ந்த செல்வ பாண்டி (33) மற்றும் வாழவந்தாள்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (32) மற்றும் சிவந்திபட்டியை சேர்ந்த ராம்குமார் (32) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த குருசாமி (55) (முன்னாள் ரானுவ வீரர்) என்பவர் சாத்தூரிலிருந்து கோவில்பட்டி நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.
குருசாமி மது போதையில் காரை வேகமாக ஒட்டியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டியிருந்த 3 பணியாளர்கள் மீது மோதியது.
மேலும் படிக்க | துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்...ஆளுநருக்கு தமிழக அரசின் செக்
இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த பணியாளர்கள் செல்வபாண்டி, கருப்பசாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
பின்னர் செல்வ பாண்டியின் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனையிலும், கருப்பசாமியின் உடலை கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த சிவந்திபட்டியை சேர்ந்த ராம்குமார் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் கார் ஒட்டுநர் குருசாமி(55) கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் குருசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | காதல் மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR