மருத்துவம் போன்று இன்ஜினியரிங் படிப்பதற்கு நீட் தேர்வு இல்லை-NIT குழும தலைவர் சீதாராம்
இன்ஜினியரிங் படிப்பதற்கு நீட் தேர்வு திட்டம் தற்போது வரை இல்லை - தேசிய தொழில்நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர் சீதாராம் கூறியுள்ளார்.
சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 32வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இதில், தேசிய தொழில்நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர் சீதாராம் கலந்து கொண்டார்.
32வது பட்டமளிப்பு விழா:
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய தொழில் நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர் சீதாராம் கலந்து கொண்டார். இவர், 3504 இளநிலை பட்டதாரிகளுக்கும், 551 முதுநிலை பட்டதாரிகளுக்கும், 104 மாணவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கினார். இதில் டிப்ளமோ மருந்தகத் துறையில் பயின்ற 9 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு துறை படிப்புகளில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர் 47 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | “6 வயசுல இருந்து மகனை தனியா வளர்த்தாரு” - ஜெகதீஷ்வரனின் மாமா கண்ணீர்!
மருத்துவம் போன்று நீட்..
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய இந்திய தொழில்நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர் சீதாராம், மாணவர்கள் தொடர்ந்து தங்கள் இலக்கை நோக்கி பயணிக்கவும் தங்கள் பாதையை தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்திற்கு கல்வி அவசியம் என்றும் கூறினார். இதையடுத்து விழாவில் அவர் செய்தியாளர்களை சந்திதார். அப்போது, தேசிய தொழில்நுட்ப கல்லூரி இந்தியா முழுக்க தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் மேலும் தொடர்ந்து தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வித்தரத்தை உயர்த்த பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வை போன்ற அவசியம் தற்போது வரை தொழில்நுட்ப துறைகளில் படிப்பதற்கு தேசிய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் சார்பாக எந்தவித தேர்வு திட்டமும் இல்லை என்று சீதாராம் பேட்டியளித்தார்.
நீட் எழுதிய மாணவர் தற்கொலை:
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர் ஜெகதீஸன் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார், இதைத்தொடர்ந்து அந்த மாணவனின் தந்தையும் மகனின் காரியங்களை முடித்த பிறகு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. அரசியல் பிரமுகர்கள் பலரும் இதனால் நீட் தேர்வுகளுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் ஒரு கிராமமே இடமாறப்போகுது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ