ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தடை தொடரும் என SC உத்தரவு..!
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 13ஆம் தேதி வரை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..!
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 13ஆம் தேதி வரை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..!
கடந்த 2016 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அப்பாவு வழக்கில் கடைசி மூன்று சுற்றுகள் அதாவது 19,20,21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை எனவும், 203 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது எனவும், எனவே அந்த வாக்குகளை திரும்ப எண்ண வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை எதிர்த்து திமுகவின் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறுவாக்கி எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டதைதொடர்ந்து, மறுவாக்கி எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே இன்பதுரை உச்சநீதிமன்றத்தை நாடியதால் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையை நவம்பர் 13 ஆம் தேதி வரை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.