வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சமீபத்திய சட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
தமிழ்நாட்டில், பின்தங்கிய வகுப்பினருக்கான 20 சதவீதத்திற்குள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சமீபத்திய சட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
சட்டத்தை முழுமையாக படிக்காமல், தடை உத்தரவு பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிபதிகள் கூறினார்.
சென்னையைச் சேர்ந்த சந்தீப் குமார் மற்றும் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த இந்தநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இந்த மனுக்கள் முன்னதாக இந்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்ற மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த மனு குறித்து பதிலளிக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தமிழ்நாடு அரசிடம் கோரியிருந்தது. இந்த சட்டம் பிப்ரவரி 26 அன்று எடப்பட்டி பழனிச்சாமி அஇஅதிமுக AIADMK அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதே நாளில் ஆளுநர் இதற்கு ஒப்புதலும் அளித்தார்.
ALSO READ | தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: PMK
இந்த மசோதா மூலம் மாநிலத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிlஉம், மாநில அரசு வேலைகளிலும் வன்னியார் சமூகத்திற்கான சிறப்பு ஒதுக்கீட்டை வழங்குகிறது மற்றும் நியமனங்கள் அல்லது பதவிகளை வழங்குகிறது.
அதிமுக ஆட்சியின் போது பாமகவின் கோரிக்கையை ஏற்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உருவாக்கி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டம் இயற்றியது.
சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில், அதிமுக அரசின் மூலம் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும்இந்த மசோதாவின் செல்லுபடியாகும் தன்மை குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், இதன் மீது தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | சென்னை IITல் அதிர்ச்சி; எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியின் மகன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR