தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதையடுத்து புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, மாணாக்கர்கள் பேருந்துகளில் பயணிக்க பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.


கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள மாணாக்கர்கள், பேருந்துகளில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. புதிய கல்வி ஆண்டு நாளை தொடங்க உள்ளதால்,  நடப்பாண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகள் பள்ளிகளில் இனி தான் தொடங்கும்.


எனவே, நடப்பாண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, மாணாக்கர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மாணாக்கர்கள் பள்ளி சீருடை அணிந்திருந்தாலே, அவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.