சென்னை மதுரவாயலில் மர்ம காய்ச்சலால் பூஜா என்கிற பள்ளி மாணவி உயிரிழப்பு
சென்னை மதுரவாயலில் மர்ம காய்ச்சல் தாக்கத்தால் பூஜா என்கிற 13 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு.
சென்னை மாநகராட்சி மண்டலம் 11, 144 வது வார்டு, வேல் நகர் 4 வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்-சுஜிதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், இதில் மூத்த மகள் பூஜா ஆவார். இவருக்கு 13 வயது ஆகிறது. இவர் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் 8 வது படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பூஜா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பூஜாவை அவரது பெற்றவர்கள் கேஎம்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று மாலை பூஜா சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார், பூஜா ஏன் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனையில் பெற்றோர் கேட்ட பொழுது அவர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஆ.ராசா, பொன்முடி சர்ச்சை பேச்சு - மௌனம் கலைத்த மு.க. ஸ்டாலின்
மேலும் அந்த பகுதியில் சிலருக்கு இந்த காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும் தற்போது கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் அப்பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், கொசு மருந்து அடித்தல், சுண்ணாம்பு தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சிறுமிக்கு சரியான சிகிச்சை அளிக்க வில்லை என்றும், பூஜாவுக்கு டெங்குவா? பன்றி காய்ச்சலா ? வைரஸ் காய்ச்சலா? என கேம்எம்சி மருத்துவமனை உரிய விளக்கம் அளிக்க வில்லை என்று பூஜாவின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மேலும் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது, அத்துடன் அந்த பகுதியில் அதேபோல் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதால் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர் மேலும் அப்பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதீயில் உள்ளனர்.
மேலும் படிக்க | 'தெலுங்கு பட அமைச்சர்கள்' - திமுக அமைச்சர்களை கலாய்த்த ஜெயக்குமார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ