2022 ஆம் ஆண்டு பயங்கரமாக இருக்கும்! இந்தியாவுக்கான பாபா வெங்காவின் கணிப்பு

Baba Vanga Predictions 2022: 1996 ஆம் ஆண்டு இறப்பதற்கு முன்பே, ​​5079 ஆம் ஆண்டு இந்த உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துள்ளார் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 27, 2021, 04:28 PM IST
  • ஆஸ்திரேலியா மற்றும் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெள்ளம் ஏற்படும்
  • 2022 ஆம் ஆண்டிலும் வெட்டுக்கிளியால் இந்தியாவில் கடுமையான பட்டினி
  • 2022 ஆம் ஆண்டில், பூமிக்கு வேற்றுகிரகவாசிகளை வருவார்கள்.
2022 ஆம் ஆண்டு பயங்கரமாக இருக்கும்! இந்தியாவுக்கான பாபா வெங்காவின் கணிப்பு title=

Baba Vanga Predictions 2022: 2021 ஆம் ஆண்டு நம்மை கடந்து செல்கிறது. இன்னும் ஒருசில நாட்களுக்குப் பிறகு புதிய ஆண்டு நம்மை வரவேற்க உள்ளது. இதற்கிடையில், அல்கொய்தாவின் 9/11 தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவில் சுனாமி வரை துல்லியமாக கணித்த பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வெங்கா (Baba Vanga), 2022 ஆம் ஆண்டில், கொரோனாவிலிருந்து ஒரு கொடிய வைரஸ் வரும் என்று எச்சரித்துள்ளார். இதுமட்டுமின்றி புத்தாண்டில் வேற்றுக்கிரகவாசிகள் பூமியை தாக்கலாம் என்றும் கணித்துள்ளார். வெட்டுக்கிளி தாக்குதல் இந்தியாவில் பட்டினியை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சியையும் தந்துள்ளார். பாபா வெங்கா பால்கன் பிராந்தியத்தின் நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus) என்றும் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கேரியாவை சேர்ந்த பாபா வெங்காவின் உண்மையான பெயர் வெங்கலியா பாண்டேவ சுர்சேவா. பாபா வெங்கா 1911 ஆம் ஆண்டு பிறந்தார் மற்றும் அவர் 1996 இல் இறந்தார். 12 வயதில், பாபா வெங்கா கடுமையான புயலில் மின்னல் தாக்கி தனது கண்களின் பார்வையை இழந்தார். அவரது மரணத்தை அவரே துல்லியமாக கணித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். மேலும் எதிர்காலத்தைப் பார்க்கும் அரிய வரத்தை கடவுள் தனக்கு அளித்துள்ளதாகக் கூறினார். பாபா வெங்கா, 1996 ஆம் ஆண்டு இறப்பதற்கு முன்பே, ​​5079 ஆம் ஆண்டு இந்த உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துள்ளார் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

அதில் 2022 ஆம் ஆண்டு என்னென்ன நடக்கும் என்றும் தனது கணிப்பில் பாபா வங்கா எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி புதிய ஆண்டில் உலகில் இயற்கை பேரழிவுகள் வரும் என்று பாபா வெங்கா கூறியுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெள்ளம் ஏற்படும். அதாவது 2022 ஆம் ஆண்டில், பல ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்படும், நூற்றுக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ALSO READ | முன்பைவிட பூமி தற்போது அதிவேகமாக சுழல்கிறது - விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

2022-ம் ஆண்டில் கொரோனாவை விட ஆபத்தான வைரஸ் தாக்கக்கூடும் என்று அவர் கணித்துள்ளர். இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்றும், சைபீரியாவில் இதுவரை பனியில் உறைந்திருந்த புதிய வைரஸை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடிக்கும் என்று அவர் கூறினார். உலகம் முழுவதும் குடிநீர் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. வரும் ஆண்டில் உலகின் பல நாடுகள் குடிநீர் தட்டுப்பாட்டை (Drinking Water Crisis) சந்திக்க நேரிடும் என்று பாபா வெங்கா கணித்துள்ளார்.

வெட்டுக்கிளி தாக்குதலால் 2021 ஆம் ஆண்டில் உலகமே கலக்கமடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல 2022 ஆம் ஆண்டிலும் வெட்டுக்கிளி திரளாக இந்தியாவில் பயிர்கள் மற்றும் வயல்களைத் தாக்கும். இதன்மூலம் இந்தியாவில் கடுமையான பட்டினியை ஏற்படுத்தும் என்று பாபா வெங்கா கூறுகிறார். 

ALSO READ | Aliens: வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா..!!

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கி (Locust Attack) பயிர்களைத் நாசம் செய்தன என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். 

2022 ஆம் ஆண்டில், பூமியில் உயிரினங்களைத் தேட ஒமுஅமுவா (Oumuaumu) என்ற சிறிய கோள் மூலம் பூமிக்கு வேற்றுகிரகவாசிகளை (Alien Invasion) வருவார்கள் என்று பாபா வெங்கா தனது கணிப்பில் தெரிவித்துள்ளார். 

ALSO READ |  அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கே வெற்றி என நாஸ்டர்டாம் கணித்தது உண்மையா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News