நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணி செய்து வருபவர் மார்க்ரட் தெரசா. குற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் கறாராக ஈடுபடுவார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள பழவூரில் நடந்த கோவில் கொடை விழாவிற்காக பாதுகாப்பு பணிக்கு இவர் தலைமையில் போலீசார் சென்றுள்ளனர். கோவில் கொடை விழா முடிந்த பிறகு கொடை விழாவிற்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் காவல் உதவி ஆய்வாளர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பிளக்ஸ் போர்டு கழட்ட வைத்திருந்த கத்தியால் ஆறுமுகம் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரட் தெரசாவை குத்தியுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசாரால் காவல் உதவி ஆய்வாளரை மீட்கப்பட்டு முதற்கட்ட சிகிச்சைக்காக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் நிலை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க | ராமஜெயம் கொலை வழக்கு ; கடந்து வந்த பாதை


இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். காவலரை கத்தியால் குத்திய ஆறுமுகத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் ஏற்கனவே மது அருந்திவிட்டு வந்து சென்றதாக இவர் மீது காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்ததால் ஏற்பட்ட முன்விரோதம் எனக் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | முறை தவறி பள்ளி மாணவியைக் காதலித்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR