kallakurichi: கள்ளக்குறிச்சி சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு
Kallakurich 144 Impoed: கள்ளக்குறிச்சி சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிஎன் ஸ்ரீதர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிஎன் ஸ்ரீதர் அறிவித்தார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி, நேற்று முன்தினம் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நடைபெற்றது.
மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை - மாணவி தரப்பு வழக்கறிஞர்
பேரணியாக செல்ல முயன்ற அவர்களை காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதனையடுத்து, கள்ளக்குறிச்சி சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிஎன் ஸ்ரீதர் அறிவித்தார்.
மாணவியின் மர்மச்சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர்கள் கடந்த 5 நாட்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று காலையில் கள்ளக்குறிச்சி போராட்டம் பெரும் கலவரமாக மாறியியது. போராட்டத்தின் போது காவல்துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியும், காவல்துறையினர் மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இதில் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பாண்டியன் காயமடைந்தார். . 20க்கும் மேற்பட்ட காவலர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறை மற்றும் பள்ளி வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கலவரக்காரர்கள் அங்குள்ள பொருட்களை சூறையாடியுள்ளனர். காவல்துறையினர் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனை அடுத்து, கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா: பாமக சந்தேகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ