தூத்துக்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள பாஞ்சாலக்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வக்கோவில் உள்ளது. அங்கே வீரசக்கதேவி என்னும் அம்மன் வீற்றிருக்கிறாள்.அங்கு வீரசக்தி தேவி ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது. 


இந்நிலையில் 2 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வரும் 12ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை ஆணை பிறப்பித்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளியூரில் இருந்து பொதுமக்களை அழைத்து வருவதற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.