ஆம்ஸ்ட்ராங் வழக்கிற்கும், சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை... என்கவுண்டருக்கு போலீசார் விளக்கம்!
Seizing Raja Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங்ராஜாவிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அவரை என்கவுண்டர் செய்ததற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது.
Seizing Raja Encounter TN Police Explanation: ஆந்திரா மாநிலம் கடப்பாவில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல சரித்திர பதிவேடு ரவுடியான சீசிங் ராஜா இன்று அதிகாலை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த என்கவுண்டர் தொடர்பாக அடையாறில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது," காவல்துறையின் சிறப்பு பிரிவினர் ஆந்திரா அருகில் வேறு ஒரு வழக்குக்காக சென்ற நிலையில், அங்கு சரித்திர பதிவேடு ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது.
சீசிங் ராஜா கடப்பாவில் கைது
தொடர்ந்து அங்கு இருந்த தனிப்படையினர் கடப்பாவில் ரவுடி சீசிங் ராஜாவை கைது செய்தனர், பின்னர் அங்கிருந்து வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் விமல் அவர்களிடம் சீசிங் ராஜாவை தனிப்படையினர் ஒப்படைத்தனர். சீசிங் ராஜாவை விசாரிக்கும்போது, அவர் தனது ஆயுதங்களை சென்னை நீலாங்கரையில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் அளித்திருக்கிறார்.
மேலும் படிக்க | ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?
அதன் அடிப்படையில் சீசிங் ராஜா பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அக்கரை பக்கிகாம் கெனால் பேங்க் பகுதிக்கு வேளச்சேரி காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் விமல் மற்றும் அடையாறு காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் இளங்கனி ஆகியோர் அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.
தற்காப்புக்காக என்கவுண்டர்
அப்போது ரவுடி சீசிங் ராஜா அங்கே மண்ணுக்குள் பதுக்கி வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து ஆஜர் செய்வதுபோல் பாவனை காட்டி காவலர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அந்த குண்டுகள் காவல்துறையினரின் வாகனத்தின் மீது பாய்ந்தது. எனவே தற்காப்புக்காக வேளச்சேரி ஜெ7 ஆய்வாளர் விமல் அவரை மார்பு மற்றும் மேல் வயிறு பகுதிகளில் சுடவேண்டிய நிலை ஏற்பட்டது.
தேடப்படும் குற்றவாளி
ரவுடி சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு, நான்கு ஆயுத வழக்குகள், மூன்று ஆள் கடத்தல் வழக்குகள், இரண்டு வழிப்பறி வழக்குகள் உட்பட 39 வழக்குகள் உள்ளன. இவர் மீது எட்டு முறை குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்கு முன்பு 10 வழக்குகள் பெண்டிங்கில் இருந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இவரை (ப்ரோக்லைன்ட் அஃபெண்டர் - Proclaimed Offender) தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்பில்லை
எங்களது விசாரணையின் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சீசிங் ராஜாவிற்கும் சம்பந்தம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் வேளச்சேரி வழக்கு தொடர்பாக மட்டுமே சீசிங் ராஜாவை கைது செய்துள்ளோம். வேளச்சேரியில் துப்பாக்கி முனையில் பணம் பறித்ததற்கான வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக சீசிங் ராஜா கைது செய்யப்பட்டார். குற்றவாளியை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதே எங்களது நோக்கம. ஆனால் வேறு வழி இல்லாமல் தற்காப்பிற்காக சுட வேண்டிய நிலை வந்தது" என்றார்.
மேலும் படிக்க | சீசிங்ராஜா என்கவுன்டர் - சம்பவ இடத்தில் இணை ஆணையர் ஆய்வு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ