கல்லூரி வாசலில் அத்துமீறிய பாஜகவினர் - விரட்டியடித்த மாணவிகள்!
Selfie With Anna Bjp : கல்லூரி வாசலில் செல்ஃபி வித் அண்ணா என்ற தலைப்பில் பாஜகவினர் உறுப்பினர் சேர்ப்பு முகாமை நடத்தப் போக, அங்கு மாணவிகள் சரமாரியாக பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில், முன் அனுமதி பெறாமல் கல்லூரி வாசலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜகவினரை, போலீஸாரும், மாணவர்களும் கண்டித்து வெளியே அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் அறிவிப்பு போன்று வாட்ஸ்அப்பில் ஓர் செய்தி வைரலாகி வந்தது.
மேலும் படிக்க | வடிவேலு போன்று 'நானும் ரவுடி தான்' என கூறி வருகிறார் அண்ணாமலை - அமைச்சர் நாசர்
அதில், பாஜக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் "செல்பி வித் அண்ணா" என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படுவதாகவும், அதில் பங்குப் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் இதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் பல்லடம் சாலையில் உள்ள தனியார் பெண்கள் கலைக் கல்லூரி ஆகிய இரண்டு இடங்களில் வழங்கப்பட உள்ளதாகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட இரண்டு கல்லூரிகளும் மறுத்துள்ளன. பாஜகவின் இந்த அறிவிப்பிற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தங்களுக்குத் தெரியாமலேயே கல்லூரியின் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள் புகார் அளித்தனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட நாளில் பல்லடம் சாலையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரிக்கு சென்ற பாஜகவினர், கல்லூரி வளாகத்திற்கு வெளியே பிரச்சாரத்தில் ஈடுபட முயன்றனர்.
இந்தத் தகவலை அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருப்பதால் முன்பக்க கதவை திறக்காமல் பின்பக்க வழியாக மாணவர்களை வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். இதனையறிந்த பாஜகவினர், கல்லூரிப் பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், முன்பக்க கதவை திறந்துவைத்து பாஜகவினரை எச்சரித்தனர்.
மேலும் படிக்க | தைரியமா? விடியலுக்கா? - பதிவு போட்ட சவுதாமணியின் கைதும் முழு பின்னணியும் !
முன் அனுமதிப் பெறாமல் இப்படி கல்லூரிக்கு வரக்கூடாது என்று கூறி போலீஸார் எச்சரித்தனர். அதுமட்டுமல்லாமல், முன்பக்க வழியாக வந்த மாணவர்களும், தேர்வு சமயத்தில் எதற்காக இப்படித் தொல்லை தருகிறீர்கள் என்று பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரச்சாரத்தைக் கைவிட்டு பாஜகவினர் புறப்பட்டனர். இச்சம்பவத்தால் பாஜகவினருக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ