அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்திய அளவில் இப்போது கவனிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் அவர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது சனாதனத்தை கட்டாயம் ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியா கூட்டணியில் இருக்கும் மற்ற கூட்டணி கட்சிகளே கூட உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் உதயநிதியின் பேச்சை வைத்து மிகப்பெரிய பிரச்சாரத்தையே முன்னெடுத்துவிட்டது பாஜக.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ADMK vs BJP: இறங்கி அடிக்கும் அண்ணாமலை, குமுறலில் அதிமுக: குழப்பத்தில் எடப்பாடி


இதனைக் கருத்தில் கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில், இனி எங்கு பேசினாலும் பக்குவமாகவும், ஒவ்வொரு அடியாகவும் எடுத்து வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கந்தனேரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா மற்றும் பவள விழா தமிழக நீர் வளத்துறை அமைச்சர் மற்றும் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தலைமையில்  நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைபாளராக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதேபோல் கட்சியின் பொருளாளரான டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.


இதில் பேசிய டி.ஆர்.பாலு, " எத்தனையோ சொல்லியாச்சு. இந்தியா கூட்டணியினரே பேசுகின்றனர். உதயநிதி பேச்சுக்கான காரணம் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. பொறாமை உணர்ச்சியோடு இந்தியா கூட்டணியினர் செயல்படுகின்றனர். ஆகையால் ஒவ்வொரு அடியையும் நம் தம்பி உதயநிதி கவனமாக எடுத்து வைத்து பேச வேண்டும். காரணம் நான் தூக்கி வளர்த்த குழந்தை என்பதால் கூறுகிறேன். அன்புதலைவர் ஸ்டாலினின் ஆட்சி செங்கோட்டையில் நடக்க வேண்டும்" என பேசினார்.


பின்னர் இவ்விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சரும், கட்சியின் பொது செயலாளருமான அமைச்சர் துரைமுருகன் பேசினார். " என்னை பொருத்த வரையில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் தேர்தல் சேர்ந்து வந்தாலும் சரி, பஞ்சாயத்துக்களை கலைத்து தேர்தலை நடத்தினாலும் சரி எத்தனை பட்டாளத்தை கூட்டி வந்தாலும் திமுககாரன் அஞ்சமாட்டான். போராட கூடியவன் திமுககாரன். திமுகவோடு மோதும் கட்சிகளுக்கு எச்சரிக்கை. ஒரு முறைக்கு இரு முறை எச்சரிக்கிறேன்" என பேசினார்.


மேலும் படிக்க | 2026-ல் தமிழ்நாட்டில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை சவால்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ