செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் திடீர் சோதனை: ஜாமீன் விஷயத்தில் செக் வைக்க திட்டம்..!
கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவருடைய சகோதரர் அசோக் கட்டி வரும் பங்களாவில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி இப்போது சிறையில் இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அவர் பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தபோதும், நீதிமன்றத்தில் அவருக்கு பிணை கிடைக்கவில்லை. இதனால் தொடர்ச்சியாக நீதிமன்ற காவலில் இருக்கிறார். அவருடைய ஜாமீனுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி வெளியில் சென்றால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக நீதிமன்றத்தில் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு
அத்துடன் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இப்போது தலைமறைவாக இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. அவர் கடந்த 6 மாதங்களாகவே தலைமறைவாக இருக்கிறார். அசோகிற்கு சொந்தமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானத்துறை வரித்துறை ஏற்கனவே சோதனை நடத்தியது. குறிப்பாக அசோக்குமாரின் புதிய பங்களாவில் சோதனை நடத்தி, அங்கு அசோக்குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அவருக்கு சம்மன் அனுப்பியது வருமானவரித்துறை. இதற்கு அவர் இதுவரை நேரில் ஆஜராகவில்லை. அசோக் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
இந்த சூழலில் தான் வருமானவரித்துறையினர் மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் கரூர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, அசோக்குமாரின் தலைமறைவு காரணமாக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சோதனை செந்தில் பாலாஜியின் ஜாமின் விவகாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவும் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் இருக்கும் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜியை அரசியல் களத்தில் முடக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படியான வருமானவரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் இருந்து அவரை வெளியே கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை கிண்டலடித்த அமைச்சர் துரைமுருகன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ