தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை காவலர்கள் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
கடந்த 7ம் தேதி பைபர் படகில் நாகையில் இருந்து புறப்பட்ட தமிழக மீனவர்கள் கோடியக்கரை கடற்கரையிலிருந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை சிறைபிடித்தனர்.
இந்நிலையில் திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இன்று நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பேட்டையை சேர்ந்த சீனிவாசனுக்கு சொந்தமான படகில் சென்றவர்கள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.