சென்னை தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்கிறது. ஆனால்  சரித்திரத்தை எப்போதும் நாம் மறக்க கூடாது. நம் மண்ணில் நடந்ததையும் மறக்க கூடாது. ராஜிவ் வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பதை எப்போதும் நாம் மறக்க கூடாது. தமிழக காங்கிரஸ் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இனி உங்கள் கண்கள் உறங்கட்டும்; கால்கள் இளைப்பாறட்டும் - வாழ்த்துகள் அற்புதம்மாள்


திமுகவிற்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றிருக்க வேண்டும். இந்த தீர்ப்பு, காங்கிரஸுக்கான சித்தாந்த சவால். நேற்றிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து கொள்ளும் விதம், நிரபராதியை விடுதலை செய்ததை கொண்டாடுவது போல உள்ளது. உண்மையிலேயே அரசியலமைப்பில் எடுத்த சத்திய பிரமாணப்படி முதல்வர் செயல்படுகிறாரா என சந்தேகம் எழுகிறது. தீர்ப்பின் எந்த இடத்திலும் அவர்களை நிரபராதி என உச்சநீதிமன்றம் கூறவில்லை. ஆனால் முதல்வரோ, விமான நிலையத்தில் பேரறிவாளனை ஆரத் தழுவி ஏதோ சாதனை செய்தது போல் காட்டிக் கொள்கிறார்.  


7 பேரும் குற்றவாளிகள் மட்டுமே.  அவர்கள் கொண்டாடப்பட வேண்டியர்வர்கள் இல்லை. தமிழகத்தில் கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால், பேரறிவாளனின் விடுதலையைக் கொண்டாட வேண்டாம். அதிமுக பேரறிவாளனை கட்டிப்பிடித்து  முத்தமிட்டு  போராளிகள் என கூறி வரவேற்கவில்லை. அதிமுகவைப் பொறுத்தவரை 7 பேரும் குற்றவாளிகள்தான். பேரறிவாளன் ஏன் விடுதலை செய்யப்பட்டார் என்றால், சிறையில் இருந்த அவரது நடத்தை, பரோலில் வெளிவந்தபோது அவரது நடத்தை, கல்வி ஆகிய காரணங்களுக்காகத்தான். அதனால் எஞ்சிய 6 பேருக்கும் இந்த விடுதலை நேரடியாக பொருந்தாது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே விபத்து நடந்த குவாரி, காங்கிராஸ் கட்சி சார்ந்தவரின் கல்குவாரி. 


அதைத் தெரிந்தே திமுக குவாரியை நடத்த அனுமதித்துள்ளது. அந்த குற்ற உணர்ச்சியால்தான் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இந்த விபத்துக் குறித்து ஒரு நபர் ஆணையம் மூலம் விசாரணை நடத்த வேண்டும். அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது. அதில் முக்கிய கட்சியாக அதிமுக இருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவின் 4 எம்எல்ஏக்களின் ஆதரவு அதிமுக வேட்பாளர்களுக்கு கொடுப்போம்.!’ என்று தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸின் அமைதி ஆர்ப்பாட்டம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR