நாமக்கல்லைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவரும், எஸ்.பி.ஐ வங்கியில் தற்காலிகமாக பணியாற்றி வரும் நபர் ஒருவரும் கடந்த 19ஆம் தேதி இரவு தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவ்வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 4 பேர்  அந்தப் பெண்ணையும், ஆணையும் தாக்கியுள்ளனர்.  இதனையடுத்து வங்கி ஊழியரை கட்டிப்போட்டு விட்டு பெண்ணை தனியாக அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையும் அவர்கள் செய்துள்ளனர். அதோடு மட்டுமின்றி அந்த பெண் அணிந்திருந்த 1 1/4 சவரன் தங்க செயின், ரொக்கப்பணம் 7 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குறித்து நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 



இந்நிலையில் வீசாணம் பகுதியை சேர்ந்த நவீன்குமார், தினேஷ்குமார், முரளி ஆகியோரை கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக இருக்கு வல்லரசு என்பவரையும் போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட முரளி, நவீன்குமாரை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | சென்னையில் 900 பேர் பங்கேற்ற மது விருந்து: அளவுக்கு அதிகமான போதையில் 21 வயது இளைஞர் பலி!


இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தினேஷ்குமார் உடல்நிலை சரியில்லாததால் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாமக்கல்லில் பெண்ணை மிரட்டி 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR