சென்னையின் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பலரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பி.எஸ்.பி.பி (PSBB) ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்புகளில் தகாத முறையில் (Sexual Harassment Cases) நடந்துகொள்வதாக ஏற்கனவே மாணவர்கள் தரப்பில் பல புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் அவற்றை தீவிரமாக எடுத்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


ALSO READ | PSBB: உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்தால் தமிழக அரசு கலைக்கப்படும்-சுப்பிரமணியம் சுவாமி அதிரடி


இது தொடர்பான பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை வரும் ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அப்துல் பாருக் உத்தரவிட்டார். மேலும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இது ஒருபுறம் இருக்க பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்கள் அளிக்கலாம் என்றும், அவர்களது பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும், புகாரை தன்னுடைய 94447 72222 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமி கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது செல்போன் எண்ணிற்கு தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன.


இவ்வாறு புகார்கள் பெறப்பட்ட பள்ளி, கல்லூரியின் பெயர்களையும், ஆசிரியர்களின் பெயர்களையும் போலீசார் பட்டியலிட்டு வருகின்றனர். அதனடிப்படையில் புகார்களின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.


இந்நிலையில் தற்போது மானவிகள் பாலியல் புகார் தொடர்பாக சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி (Maharishi Vidya Mandir School) ஆசிரியர் ஆனந்தன் என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளத்தில் வெளியாயின. இதையடுத்து பள்ளி ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR