டெல்லியில் ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆலாம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகள் ஸ்ரீமதி. இவர் டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் கடந்த 6 மாதங்களாக படித்து வந்தார்.


இந்நிலையில் விடுதியில் இருந்த ஸ்ரீமதியின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை என்பதால் பதற்றமடைந்த சக மாணவிகள் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் வந்து பார்த்தபோது ஸ்ரீமதி இறந்து கிடந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவி ஸ்ரீமதி தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் உயிரிழந்ததை அறிந்த ஸ்ரீமதியின் பெற்றோர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.