Chennai Crime News Latest Updates: சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ் (35). பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை இவர் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி நிவேதிதா மற்றும் 6 வயது குழந்தை ஆகியோர் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நிஷாந்த் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (அக். 31) அதாவது தீபாவளி தினத்தன்று நவாஸ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி வேலை முடிந்து பாத்ரூமில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.‌


பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி


அப்போது நீண்ட நேரமாகியும் குளிக்க சென்ற சிறுமி வெளியே வராததாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா இருவரும் ஓடிச்சென்று பாத்ரூம் கதவை தட்டியதாகவும், அவர் கதவை திறக்காததாலும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி தரையில் மயங்கிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.


தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் நவாஸ் வீட்டை பூட்டிவிட்டு மனைவி குழந்தையுடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நேற்று மாலை வீட்டு உரிமையாளர் முகமது நிஷாந்த் தனது வழக்கறிஞர் மூலம் சிறுமி இறந்தது குறித்து அமைந்தக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | தீபாவளி பண்டிகை: 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை


உடலில் இருந்த காயங்கள்...


தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா முன்னிலையில் பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்றினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் சிறுமி உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் கிளம்பியது. இதனை அடுத்து போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் முகமது நவாஸ் அவரது சகோதரி மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த 16 வயது சிறுமியை அவரது வீட்டிற்கு வேலைக்கு பணியமர்த்தியது தெரியவந்தது.


கொலை செய்த தம்பதி


அந்த சிறுமியின் தந்தை காலமானதால் தாயின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.‌ மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி தனது தாயை பிரிந்து கடந்த ஓராண்டாக முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்தச் சூழலில்தான், கணவன், மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தி கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் கணவன் மனைவியிடம் இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சட்ட விரோதமாக பணியமர்த்தியது எப்படி?


பொதுவாக 18 வயதுக்குட்பட்ட சிறார்களை வீட்டில் பணியமர்த்த கூடாது என சட்ட விதிகள் இருந்தும் நவாஸ் எப்படி 16 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு அமர்த்தினார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ