Tamil Nadu Latest News: சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் எம்ஆர்எப் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட சிஎஸ்ஆர் நிதியின் மூலம் கட்டபட்டுள்ள கண் அறுவை சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்ஆர்எப் சிஎஸ்ஆர் நிதி


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,"இந்த அரசு மருத்துவமனை ஏற்கனவே சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சை மருத்துவம் என்பது ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே அதன் மையங்கள் உள்ளன.


திருவொற்றியூர் பெரும்பாண்மையான மக்கள் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதியில் கண் அறுவை சிகிச்சை மையம் உருவாக்க வேண்டும் என சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்ததை அடுத்து, எம்ஆர்எப் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து 55 லட்ச ரூபாய் பெறப்பட்டது.


அதன்மூலம், கண் அறுவை சிகிச்சை மையம் இந்த மருத்துவமனையில் மருத்துவரை பணியமத்தி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் இந்த மருத்துவமனையை பயன்படுத்துவதால் கூடுதலாக மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்" என்றார்.


மேலும் படிக்க | வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை… வெற்றி ஒன்றே திமுகவின் இலக்கு - உதயநிதி ஸ்டாலின்


சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த மகிழினி என்ற மூன்று வயது சிறுமி நிம்மோனியா பாதிப்பில் உயிரிழந்த குறித்தான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்,"வைரல் மற்றும் சிறப்பு காய்ச்சல் என்று எதுவும் தற்போது இல்லை.


டெங்கு மாதிரியான காய்ச்சல்கள் கட்டுக்குள் இருக்கிறது. இறப்புகள் மிக மிக குறைந்துள்ளது. காய்ச்சல் பாதிப்புகள் வீட்டிலேயே வைத்து மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் சிகிச்சை பெறுவதால் இது போன்று நடைபெறுகிறது. இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு ஆரம்ப சுகாதார நிலையம்
மருத்துவமனை, மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளது.


காய்ச்சல் முற்றிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து வருவதாலேயே இறப்புகள் நேரிடுகிறது. எண்ணூர் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் மீனவர்களுக்கு முழு உடல் பரிசோதனையானது வரும் ஞாயிற்றுகிழமை மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக நடைபெறும்" எனவும் தெரிவித்தார்.


மேலும் கிளாம்பாக்கத்திற்கும் கோயம்பேட்டிற்கும் முன் அறிவிப்பு இல்லாமல் மக்கள் அலைகழிக்கபடுவதாக ஜெயக்குமாரின் X வவைதள கருத்து குறித்த கேள்விக்கு, "அதற்கென அமைச்சர்கள் இருக்கிறார்கள், அவர்களை கேளுங்கள்" என கூறி சென்றார்.


மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இலக்கியமாமணி விருது அறிவிப்பு!


ரத்த மாதிரி முடிவுகள்?


முன்னதாக சென்னை, வளசரவாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கோதண்டராமன், இவரது மனைவி நிவேதா. இந்த இணையரின் மூத்த மகள் மகிழினி (3) வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இவர் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று  அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். 


வைரஸ் காய்ச்சல் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதன் முடிவுகள் வருகிற ஜன. 29ஆம் தேதி கிடைக்கும் என்று கூறியதால் தற்போது குழந்தை உயிரிழந்த நிலையில் என்ன வைரஸ் காய்ச்சலுக்கு உயிர் பிரிந்தது என்ற விடை தெரியாமல் பெற்றோர்கள் தவிர்த்து வருகின்றனர். 


நிமோனியா வைரஸ் காய்ச்சல் என்று கூறிய நிலையில் அந்த காய்ச்சலுக்காக இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காய்ச்சலா என்று மருத்துவர்கள் ரத்த மாதிரி முடிவுகளை எதிர்நோக்கி உள்ளனர். குழந்தை உயிரிழந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்களை வைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க | நியூஸ் 7 செய்தியாளர் மீது கொடூர தாக்குதல் - புகார் அளித்தும் மெத்தனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ